'நீட் விவகாரத்தில் யாரும் பாதிக்காதவாறு தமிழக அரசின் முடிவு இருக்கும்!: திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!!

சென்னை: நீட் விவகாரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசின் முடிவு இருக்கும் என்று திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த குழுவிடம் மனு அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ஏ.கே.ராஜனை சந்தித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடந்த சந்திப்பில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பான மாணவர்களின் மனுக்களை உதயநிதி ஸ்டாலின் ஏ.கே.ராஜனிடம் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு எழுத காத்திருப்பவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக-வின் கொள்கை என்று குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories:

>