இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் திமுக அரசை பாராட்டினார்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: அதிமுக ஆட்சியில் ஆர்டிபிசி ஆர் சோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டேன். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு பணிகளை பிரதமர் பாராட்டினார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக பதப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்; அதிமுக ஆட்சியை விட, திமுக ஆட்சியில் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் திமுக அரசை பாராட்டினார். ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள் படி தான் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எந்த இறப்பு சான்றிதழிலும் இறப்புக்கான காரணம் இருப்பதில்லை. கொரோனாவால் இறந்தால் அரசு நிதியுதவி அளிக்கும் என தவறான புரிதலில் உள்ளார்கள் எனவும் கூறினார்.

Related Stories:

>