வேலூரில் சூரியன் எப்எம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள்-மாநகராட்சி கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வேலூர், :  வேலூரின்  முதன்மை பண்பலை சூரியன் எப்எம் 93.9, நேயர்களுக்கு தினம்தோறும் பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதோடு, சமுதாய நலன் கருதி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கொரோனா பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த எஸ்.எம்.எஸ் என்கின்ற சோப்பு, மாஸ்க், சமூக இடைவெளி என்பதை முன்னிறுத்தி, முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் கை கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்வதன் அவசியத்தை நிகழ்ச்சிகளின் இடையே சொல்லி புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சூரியன் எப்எம் 93.9 முடிவு செய்தது. அதன்படி வேலூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் துறையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு வாகனங்களை இயக்குகிறது.

சூரியன் எப்எம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ேநற்று நடந்தது.  வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கொடியசைத்து சூரியன் எப்எம் 93.9 விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் பொறியாளர் சீனிவாசன், செயற்பொறியாளர் கண்ணன், நகர்நல அலுவலர் சித்ரசேனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா நோய் தொற்று தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும், ஏன் எஸ்.எம்.எஸ். பின்பற்ற வேண்டும் என்பதற்காக அறிஞர் பெருமக்கள், மருத்துவ வல்லுநர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் திரை உலக பிரபலங்கள் என பலரின் ஆலோசனைகளை ஒலிப்பரப்பி வரும் சூரியன் எப்எம் கொரோனா விழிப்புணர்வு வாகனத்திருக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

பொழுது போக்கிற்காக மட்டும் அல்ல, எங்களின் நலனுக்காகவும் சூரியன் எப்எம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு நன்றி என பொதுமக்கள் தங்களின் நன்றியினை சூரியன் எப்எம்க்கு தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் துறையினரும் சூரியன் எப்எம்மின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர். சூரியன் எப்எம்மின்  கொரோனா விழிப்புணர்வு வாகனம் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories:

>