திருச்சுழி அருகே 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு

திருச்சுழி : திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சோலைமலை. விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். இவரது வீட்டில் வளர்க்கும் கோழி, 4வது முறையாக 10 முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது. இதில் ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. தற்போது நன்கு ஆரோக்கியத்துடன் உள்ளது. கோழிக்குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்ததை சுற்றிலுள்ள கிராம மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து சோலைமலை கூறுகையில்: நாங்கள் காலம் காலமாக கால்நடைகள் வளர்த்து வருகிறோம். தற்போது எங்கள் வீட்டிலுள்ள கோழி, நான்கு கால்களுடன் குஞ்சு பொரித்துள்ளது. நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம், எனக் கூறினார்.

Related Stories: