தாசில்தார் அலுவலகத்தில் 4 தாலுகாவிற்கான ஜமாபந்தி துவக்கம்

நாகை : நாகை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நாகை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, நாகை ஆகிய 4 தாலுகாவிற்கான ஜமாபந்தி நேற்று(22ம் தேதி) தொடங்கியுள்ளது. இதன்படி நாகை தாலுகாவிற்கான ஜமாபந்தி நேற்று நாகை தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. சமூகபாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் ராஜன் தலைமை வகித்தார்.

நாகை தாசில்தார் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். 1430 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) குறித்து தீர்வு காணப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் தங்களது மனுக்களை இணையதளம் //gtp.tn.gov.in./jamabandhi/ என்ற வாயிலாகவும் இசேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்திருந்தனர். வரும் 28ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.

Related Stories:

More
>