நகைச்சுவையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக்: சபாநாயகர் அப்பாவு புகழாரம்

சென்னை: நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக் மறைவு குறித்து சபாநாயகர் அப்பாவு படித்த இரங்கல் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: ‘சின்ன கலைவாணர்’ என திரையுலகில் புகழ் பெற்ற, பல்கலை வித்தகராக விளங்கிய நகைச்சுவை கலைஞர் விவேக் 17.4.21 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி, அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. தனது நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கிய விவேக், மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது மறைவால் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கம் திரைபடத்துறையினருக்கும் இப்பேரவை ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.

கரிசல் இயக்கத்தின் பிதாமகர், கி.ரா எனப் போற்றப்படும் புகழ் பெற்ற கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.

Related Stories: