திமுக-காங்கிரஸ் கூட்டணி 2024ல் தொடரும்: காங்கிரஸ் கொறடா விஜயதரணி நம்பிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது காங்கிரஸ் கொறடா விஜயதரணி பேசியதாவது: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2003ல் சோனியா காந்தி, முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி 2024ல் தொடரும். சட்டமன்ற தேர்தல் வெற்றி கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறி கொரோனாவை ஒழிக்க போராட எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.  மத்தியில் ஆளும் அரசு கூட்டத்தை கூட்டவில்லை. ஆனால், திமுக அரசு மத்திய அரசுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அனைத்து கட்சிகளின் ஆலோசனை பெற்று கொரோனாவை ஒழிக்கும் வகையில் இந்த அரசு விரைவாக செயல்பட்டுள்ளது. 4 ஆயிரம் நிவாரணத்தை இத்தனை நெருக்கடியில் சென்றடைய செய்துள்ளனர்.

14 வகையான மளிகை பொருட்கள் கொரோனாவுக்கான மருந்தாக எடுத்துக்கொள்ள முடியும்.   குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் 1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கவர்னர் உரையில் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இலவச பஸ்பாஸ் அனைத்து பெண்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மின் தடை இல்லாத மாநிலமாக உருவாக்க ேவண்டும். மத்தியில் இருந்து பெற வேண்டிய நிதியை கேட்டு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories:

>