தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ் போட்டி

சென்னை: தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் தலைவராக இருக்கும் நடிகர் நரேஷ் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே, புதிய தலைவர் உள்பட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடக்கிறது. இந்த தேர்தலில் நரேஷ் போட்டியிடவில்லை.  இவர், நடிகர் கிருஷ்ணாவின் மகன், நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நரேஷ் தனது ஆதரவு நடிகர், நடிகைகளுடன் சேர்ந்து நடிகர் மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மன்ச்சுவை தலைவர் பதவிக்கு போட்டியிட தேர்வு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு செய்துள்ளார். தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.

Related Stories:

More