×

விற்பனைக்கு எடுத்து செல்வதில் பிரச்னை இருந்தால் குடோன்களில் விளைபொருட்களை விவசாயிகள் பாதுகாக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரானா 2வது அலை தாக்குதலை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்னைகளை களைந்திட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  தமிழகத்தில் உள்ள  ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை பாதுகாத்து சேமித்திட  மாவட்டங்களில் உள்ள  ஒழுங்குமுறை  விற்பனைக்கூடங்களில் நவீன சேமிப்புகிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன.   விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக்கப் பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திடலாம். கிடங்குகளில் இருப்பு  வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விவசாயிகள் அடமானத்தில் பேரில் அதிகபட்சம் 75 சதவீத சந்தை மதிப்பு அல்லது ₹3 லட்சம் இவற்றில் எதுகுறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனாக பெற்றிடலாம். கடனிற்கான கால அளவு 180  நாட்கள் ஆகும்.   இதற்கான வட்டி 5 சவீதமாகும்.  விவசாயிகள் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திட மாநில அளவில் 044  22253884 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.  மாவட்ட அளவில் விளைபொருட்களை  விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவைக்கு வேளாண் விற்பனை குழு செயல்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post விற்பனைக்கு எடுத்து செல்வதில் பிரச்னை இருந்தால் குடோன்களில் விளைபொருட்களை விவசாயிகள் பாதுகாக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Goodons ,Tamil Nadu government ,2nd wave of Corona ,Kudons ,Dinakaraan ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...