உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி: மழையின் தாக்கம் நீடிப்பு

சவுத்தாம்ப்டன்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - மழை காரணமாக 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் 5வது நாள் வானிலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சவுத்தாம்டன் வானிலை மையம், “இன்றும் மழையின் தாக்கம் இருக்கும். காலை நேரங்களில் இடியுடன் கூடிய சாரல் மழையை எதிர்பார்க்கலாம், மதியமும் மழை பெய்ய கூடும். இருப்பினும், மாலை நேரங்களில் அதாவது இரண்டாவது செஷன் முடிந்த பிறகு மழை இருக்காது. அப்போது போட்டியை நடத்திக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.

இதனால் 5வது நாளான இன்று ஒரு செஷன் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மழையின் பாதிப்பை ஈடுசெய்ய ரிசர்வ் டே, அதாவது 6ஆவது நாள் வரை போட்டியை நடத்திக்கொள்ளலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போதுவரை முதல் இன்னிங்ஸ் கூட முழுமையாக முடிவடையாமல் இருப்பதால் போட்டி டிரா ஆவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>