×

தஞ்சையில் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் காலத்து தூக்கு மேடையை இடிக்க எதிர்ப்பு

*தொல்லியல்துறை பராமரிக்க வலியுறுத்தல்

தஞ்சை : தஞ்சாவூரில் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்குமேடையை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தூக்குமேடையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல்கரையில் 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை உள்ளது. தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. 30 அடி அகலத்திலும் 200 அடி நீளத்திலும் கட்டப்பட்ட இந்த தூக்குமேடை தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டிடங்களோடு எஞ்சியுள்ளது.

இந்நிலையில் நேற்று சிலர் இதை இடித்துவிட்டு, இந்த இடத்தை விற்க போவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியினர் திரண்டு கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகோயில் மீட்புக்குழு பொருளாளர் பழ.ராஜேந்திரன் மற்றும் தூக்குமேடை அமைந்துள்ள வீட்டின் அருகே வசிக்கும் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தூக்கு மேடையில் ஏற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இந்த தூக்குமேடையை பயன்படுத்தியுள்ளனர்.

காலப்போக்கில் தூக்குமேடை பயன்படுத்தாமல் இருந்ததால் தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்த தூக்குமேடையை யாரும் ஆக்கிரமிக்காதவாறு அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சிலர் இதனை எங்களுக்குரியது எனக்கூறி இடித்து அகற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதனை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். மேலும், இந்த இடத்தினை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Tags : Thanjah , Thanjavur, 200Years old,Marathi King, Gallows
× RELATED தஞ்சையில் புதிதாக ஆக்சிலியம்...