×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தில் உள்ள புலிகள்  காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதியை உள்ளடக்கியதாகும். இந்த  புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம்,  கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய  10 வனச்சரகங்கள் உள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி,  சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு  வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் ஆண்டுதோறும் 6  மாதங்களுக்கு ஒருமுறை மழைக் காலத்திற்கு முந்தைய மற்றும் மழை காலத்திற்குப்  பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.  

இந்நிலையில்  மழை காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று (21ம் தேதி)  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்களில் தொடங்கியது.  கணக்கெடுப்பு பணியில் நான்கு பேர் கொண்ட குழுக்களாக வனத்துறை ஊழியர்கள்  வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளின் எச்சங்கள், கால்தடம், மரங்களில்  நகக்கீறல்கள் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பு பணி  மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கென ஜிபிஎஸ் கருவி, தொலைநோக்கி, காம்பஸ்  உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி இதற்கென வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலியில்  பதிவு செய்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெறும்  இந்த கணக்கெடுப்பு பணி 26ம் தேதி முடிவடைந்தவுடன் வனப்பகுதியில் உள்ள வன  விலங்குகளின் எண்ணிக்கை குறித்து சென்னை தலைமை வனப்பாதுகாவலர் அறிக்கை  சமர்ப்பிக்கப்படும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள்  தெரிவித்தனர்.


Tags : Satyamnagalam, Tiger reserve Forest, Animal Calculation work
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...