லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சை கருத்து நடிகையிடம் மீண்டும் விசாரிக்க திட்டம்

திருவனந்தபுரம்: லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகையிடம் மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.  லட்சத்தீவில் கெடுபிடி சட்டங்களை கொண்டு வந்து, அதன் நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல், மத்திய அரசு இணைந்து மக்களின் மீது உயிரி ஆயுதமாக கொரோனாவை பரப்பினர் என்று நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா சர்ச்சை கருத்தை கூறினார். இதையடுத்து பாஜ தலைவர் அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.

 அதன்படி நேற்று முன்தினம் கவரத்தியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் நடிகை ஆயிஷா சுல்தானா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 3 மணிநேரத்துக்கும் மேல் போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணைக்கு பிறகு 3 நாள் கவரத்தியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் போலீசார் அவரை விடுவித்தனர்.  இதற்கிடையே ஆயிஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும்,  2 நாட்களுக்குள் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>