கோபா அமெரிக்கா கால்பந்து கொலம்பியாவை வீழ்த்தியது பெரு

ரியோ டி ஜெனிரோ,: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில்   கொலம்பியா அடித்த சுய கோலால் பெரு அணியிடம் பரிதாபமாக வீழ்ந்தது. கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டியின்  பி பிரிவில், குயானியாவில் நடந்த  லீக் ஆட்டத்தில்  கொலம்பியா-பெரு அணிகள் மோதின. இரண்டு அணிகளும்  முதல் வெற்றிக்கு மல்லுக்கட்டின.  ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பெரு அணியின் செர்கியோவும், 53வது நிமிடத்தில்  கொலம்பியா அணியின் மிகுயெல்  பெனால்டி மூலமாகவும் கோல் அடித்தனர். அதனால் ஆட்டத்தின்  63வது நிமிடம் வரை இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 64வது நிமிடத்தில் கொலம்பியா அணியின்  யெரி மினா  அடித்த  சுய கோலால்  பெரு முன்னிலை பெற்றது. அதே  நிலை கடைசி வரை தொடர பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை சுவைத்தது.

வெனிசுலா - ஈக்வடார் டிரா: ரியோ டி ஜெனிரோவில் நடந்த  மற்றொரு பி பிரிவு ஆட்டத்தில்  வெனிசுலா-ஈகுவேடார்  அணிகள் களம் கண்டன. தொடக்கம்  முதலே ஆதிக்கம் செலுத்திய  ஈக்வடார்  அணிக்கு, எரிடன்  39வது நிமிடத்தில்  கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 2வது பாதியில் வெனிசுலாவின் எட்சன்  51வது நிமிடத்தில்  கோல் அடிக்க ஆட்டம் சமநிலைக்கு  வந்தது.  பின்னர் ஈக்வடார் அணியின்  கோன்ஸலோ 71வது நிமிடத்தில் கோல் அடிக்க, அந்த  அணி மீண்டும் முன்னிலை பெற்றது. எனினும், கூடுதல்  நேரத்தில்  வெனிசுலாவின்  ரொனால்ட் ஒரு கோல் அடித்து 2-2 என்ற கணக்கில் டிரா செய்ய உதவினார்.

Related Stories:

>