மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்க சரத் பவார் முயற்சி

மும்பை: தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளார்.  தேர்தல் உத்திகள் வகுப்பவரான பிரஷாந்த் கிஷோர், கடந்த 11ம் தேதி மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மும்பையில் அவருடைய இல்லத்தில் சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஆனால் இந்த ஆலோசனை விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசித்ததாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன. இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சரத் பவார் நேற்று டெல்லி சென்றார்.

அப்போது பிரஷாந்த் கிஷோர் டெல்லியில் உள்ள சரத் பவாரின் வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். இது பற்றி அமைச்சர் நவாப் மாலிக்கிடம் நிருபர்கள் கேட்ட போது, சரத் பவார் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் சரத் பவாரை சந்தித்து பேசியிருக்கலாம் என்றும் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

Related Stories: