×

நடிகை ரேஷ்மா கொரோனாவுக்கு பலி

சென்னை: கிழக்குமுகம், பூமணி, மறவாதே கண்மணியே, நீ எந்தன் வானம், வடுகபட்டி மாப்பிள்ளை, என்னை தாலாட்ட வருவாயா உள்பட பல படங்களில் நடித்தவர் ரேஷ்மா. இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனும் நடிகருமான ஹம்சவர்த்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பெயரை சாந்தி(42) என்று மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்ட்டு தேனாம்பேட்டைதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.ஆனாலும் மூச்சு திணறல் இருந்தது. மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் தேனாம்பேட்டைஅவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று ெசன்ட்நகர் மின்மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.

Tags : Reshma ,Corona , Actress Reshma kills Corona
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்