×

மாணவிகள், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிவசங்கர் பாபாவால் பாதித்தவர்கள் புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு: சிபிசிஐடி போலீசார் தகவல்

சென்னை:  செங்கல்பட்டு கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் ‘சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி’யின் நிறுவனரானக பிரபல நடன சாமியார் சிவசங்கர் பாபா(72), மீது பள்ளி முன்னாள் மாணவிகள் பாலியல் தொந்தரவு  மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து,  முதலில் மாமல்லபுரம்  மகளிர் போலீசார் போக்சோ உள்பட 6 வழக்குகளின் கீழ் 3 வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் ஒரு ஆசிரியையை கைது செய்தனர். சிபிசிஐடி ேபாலீசாரின் வழக்கு விசாரணையில், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரமத்துக்கு வந்து சென்ற தொழிலதிபர்கள் மனைவிகள் மற்றும் மகள்கள் என 500க்கும் மேற்பட்டோர் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான தனிப்படை கடந்த 16ம் தேதி டெல்லியில் சிவசங்கரை கைது செய்தனர். முன்னதாக சிவசங்கர் பாபாவிடம் மாணவிகளை அனுப்பி வைத்த பாரதி, தீபா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையே, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, முதலில் செங்கல்பட்டு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், கணினியில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், ‘சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வேண்டும் என்றால், புலன் விசாரணை அதிகாரியான காவல் துணை கண்காணிப்பாளர் குணவர்மன் செல்போன் எண்: 9840558992 மற்றும் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி செல்போன் எண்: 9840669982 மற்றும் மின்னஞ்சல் inspocu2@gmail.com ல் புகார் அளிக்கலாம். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் 24 மணி நேரமும் இயங்கும் சிபிசிஐடி கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்களான: 28512500, 28512510 ல் புகார்கள் தெரிவிக்கலாம். புகார்தாரர் மற்றும் புகார்தாரர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும்’. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivasankar Baba ,CBCID , Victims of sexual harassment of students and women have been informed by Sivasankar Baba to lodge a complaint: CBCID Police
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...