முக்கியமான வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இல்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பேட்டி:  ஆளுநர் உரையில் வழக்கமாக அரசின் முன்னோடி திட்டங்கள், இடம் பெறும். ஆனால், இன்றைய ஆளுநர் உரையிலே அப்படிப்பட்ட முக்கியமான முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஒரு கமிட்டியை, குழுவை அமைத்திருக்கிறார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்த முக்கிய அறிவிப்புகளும் ஆளுநர் உரையில்  இடம் பெறவில்லை என்றார். சட்டப்பேரரவைக்கு வருபவர்கள் அனைவரும் கொேரானா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக உறுப்பினர் ஒருவருக்கு பாசிட்டிவ் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்டது. சந்தேகம் ஏற்பட்டு தனியார்  மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

Related Stories:

>