பக்தர்களினின்றி அடுத்த மாதம் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

புவனேஸ்வர்:  ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலகப்புகழ்பெற்றது. கொரோனா அச்சுறுத்தல் நிலவியதால் வரலாற்றிலேயே  முதல் முறையாக கடந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல்  ரத யாத்திரை நடத்தப்பட்டது.   இதனால் இந்த ஆண்டு ரத யாத்திரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் 12ம் தேதி ரத யாத்திரை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி ரத யாத்திரை நடத்தப்படும் என்று நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சேவகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள். அவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டிருப்பதும் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: