தடகள ஜாம்பவான் உசைன் போல்ட்டுக்கு ட்வின்ஸ் : குழந்தைகளுக்கு செயின்ட் லியோ போல்ட், டண்டர் போல்ட் என பெயர் சூட்டி ஆனந்தம்

ஜமைக்கா : தடகள ஜாம்பவான் உசைன் போல்ட் மேலும் 2 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். தந்தையர் தினத்தில் இந்த தகவலை தனது ரசிகர்களுக்காக சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட்டுக்கு தற்போது 34 வயது ஆகிறது.100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்கள் மட்டுமல்லாது 100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் உலக சாதனையை தக்க வைத்து கொண்டுள்ளார்.சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டதால் வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் போல்டின் மின்னல் வேக ஓட்டத்தை ரசிகர்கள் காண முடியாது. இந்த நிலையில், ட்வின்ஸ்களை பெற்றெடுத்திற்பதாக அவர் இன்ஸடாவில் பதிவிட்டுள்ளார்.

தோழி காசி பென்னட்டுடன் குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.தனது முதல் மகளுக்கு ஒலிம்பியா லைட்னிங் எனப் பெயரிட்டு இருக்கும் உசைன் போல்ட், இந்த ட்வின்ஸ்களுக்கு செயின்ட் லியோ போல்ட், டண்டர் போல்ட் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார். இந்த குழந்தைகள் எங்கு, எந்த தேதியில் பிறந்தது என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த செல்லங்களுக்கு வைத்திருக்கும் பெயரை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

Related Stories:

>