மேசையை தட்டாமல் உரை கேட்ட உறுப்பினர்கள்.. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே? : சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநர்

சென்னை : கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் உரையில்,  தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்த பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அப்போது அவையில் இருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.ஆளுநர் உரை நிகழ்த்திய 52 நிமிடங்களும் சட்டப்பேரவையில் இருந்த எந்த உறுப்பினரும் மேசையை தட்டவில்லை. கடந்த காலங்களில் கேட்ட காதடைக்கும் மேசை தட்டும் சத்தம் இல்லாத ஆளுநர் உரை நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது.வழக்கமாக அரசையோ , கட்சித் தலைவரையோ பாராட்டும் வார்த்தை வரும் போதெல்லாம் உறுப்பினர்கள் மேசையை தட்டுவார்கள்.இன்று ஆளுநர் உரையில் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட போதிலும் யாரும் மேசைகளை தட்டவில்லை.இதை கவனித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டுங்கள் என சொல்லி அவையை கலகலப்பாக்கினார். இதனையடுத்து ஆளுநரின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் எம்எல்ஏக்கள் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Stories:

>