மேகதாதுவில் காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு வலுக்கும் எதிர்ப்பு!: கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

கும்பகோணம்!: மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா உருவபொம்மையை ஆற்றில் வீசி முழக்கங்களை எழுப்பினர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

கர்நாடக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் மேலகாவிரி ஆற்றுப்பாலம் அருகே காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடக மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உருவபொம்மையை ஆற்றில் வீசி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அனைத்து விவசாய அமைப்பினரையும் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கர்நாடக அரசு முயற்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

Related Stories: