×

கொரோனா பரவல் எதிரோலி: திருவண்ணாமலையில் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம்; கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலம் செல்ல ஜூன் 24ம் தேதி முதல் 26 வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 


பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 14 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Corona ,Grivalla ,Thiruvannamala ,Temple Administration , Corona spread, Thiruvannamalai, Kiriwalam, do not come
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...