×

புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை: ஐ.நா விமர்சனத்திற்கு மத்திய அரசு பதிலடி

டெல்லி: இந்தியா கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் செய்த விமர்சனத்திற்கு மத்திய அரசு பதிலடி தந்துள்ளது. இந்தியா புதிதாக அறிமுகம் செய்துள்ள தகவல் தொழில்நுட்ப கொள்கையை பல சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. வாட்ஸ்அப் நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் டுவிட்டர் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை குறித்து ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் அவையின் குழு அது சர்வதேச மனித உரிமைகள் கொள்கைக்கு ஏற்றதாக இல்லை என தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி தந்துள்ள இந்தியா பேச்சுரிமைக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் இந்திய சட்டம் உத்தரவாதம் அளிப்பதாக கூறியுள்ளது.

மேலும் புதிய சட்டம் பெண்களின் பாதுகாப்புக்கும், சட்டவிரோதமான தகவல்களை நீக்குவதற்கும் வழி செய்வதாக தெரிவித்துள்ளது. இவை தவிர தகவல் தொழில்நுட்ப பிரச்சனைக்கு இந்தியாவிலேயே குறைதீர்க்கும் முறையும், இணையவழி பாதுகாப்புக்கும் வழிவகை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.



Tags : UN Na , UN, India
× RELATED பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு...