விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது விபத்து!: ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்..!!

விருதுநகர்: சாத்தூர் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது விபத்து ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியை அடுத்த கலைஞர் காலனி பகுதியில் சூர்யா என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் காலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பட்டாசுகள் உராய்வு காரணமாக திடீரென வெடித்து சிதறியுள்ளது. 

இந்த விபத்தில் அருகில் இருந்த 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர்,  வெம்பக்கோட்டை, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கலைஞர் காலனியை சேர்ந்த செல்வமணி என்பவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: