×

மத்திய அரசின் புதிய கொரோனா தடுப்பூசி கொள்கை இன்று முதல் அமல்

டெல்லி: மத்திய அரசின் புதிய கொரோனா தடுப்பூசி கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் வேகம் பெறுமா என்ற கேள்விக்கான விடையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தடுப்பூசி தான் கொரோனாவிலிருந்து காக்கும் பேராயுதம் என்று கூறப்படும் நிலையில் நாட்டின் கோவிட் தடுப்பூசி திட்டம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறது.

கடந்த மாதம் இந்திய மக்களுக்கு கிடைத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. இதனால் மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. போதிய அளவில் தடுப்பூசிகள் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியை மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன. அதன்பலனாக மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்யும் கொள்கையை கைவிட்டு மத்திய அரசு தடுப்பூசிகளின் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுப்பது. இதனால் ஜூன் மாதம் மக்களுக்கு கிடைக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. நாடுமுழுவதும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 35 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி அளித்தால் மட்டுமே மூன்றாவது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் மத்திய அரசு தடுப்பூசி கொள்முதலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தடுப்பூசிகளின் கொள்முதல் அதிகரிக்கும் நிலையில் அத்துடன் விநியோகம் மற்றும் பயன்பாடு அதிகரிப்பதும் முக்கிய சவாலாக உள்ளது. இதுவரை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் கிட்டத்தட்ட 6 சதவீதம் வீணாகிவிட்டன. இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியாவில் 2016 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால் அதில் தாமதங்கள் எப்படி தவிர்க்கப்படும். தடுப்பூசிகள் வீணாகாமல் பொதுமக்களை சென்றடையுமா என்பது முக்கிய கேள்விகள். இத்தகைய சவால்களுக்கு இடையே தான் தடுப்பூசி கொள்கையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அதனால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயத்தில் நாட்டில் உற்பத்தியாகும் 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பொதுமக்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டுக்கு விநியோகிப்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுமையை ஓரளவுக்கு குறைக்கும்.



Tags : Federal Government ,Amal , corona vaccine
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...