ஜன்னல் அருகே அமர்ந்து வேடிக்கை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த குரங்கு

புதுடெல்லி: டெல்லியில் யமுனா கரை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4.40 மணிக்கு மெட்ரோ ரயில் புறப்பட்டு சென்றது. சற்று தூரம் சென்ற நிலையில் பெட்டியில் குரங்கு ஒன்று இருந்ததை கண்டு, பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். குரங்கு அங்கும் இங்குமாக சுற்றி வந்து, கடைசியில் ஒருவரின் அருகே இருக்கையில் அமர்ந்தது. பிறகு, அமைதியாக பயணத்தை தொடர்ந்தது. அவ்வப்போது இருக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தது. இது, பயணிகளை ஆச்சரியம் அடைய செய்தது. எனினும், குரங்கு ரயிலில் பயணம் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளுக்கு குரங்கால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. ரயிலில் சோதனை செய்தபோது குரங்கை காணவில்லை.  அது ரயிலுக்குள் எப்படி வந்தது குறித்து விசாரித்து வருகிறோம்,’ என்றனர். அந்த குரங்கு ஆனந்த் விகார் முதல் துவாரகா வரை பயணம் செய்தது.

Related Stories:

>