லட்சத்தீவின் நீதி அதிகாரத்தை கர்நாடகாவுக்கு மாற்ற பரிந்துரை

கொச்சி: லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா பட்டேலை சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு நியமித்தது. இவர், லட்சத்தீவில் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது, மது அருந்தலாம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது உள்ளிட்ட புதிய சட்டங்களை கொண்டு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரை திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், அவரை நீக்கும்படி கேரள உயர் நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்நிலையில், லட்சத்தீவின் உயர் நீதிமன்ற அதிகாரத்தை கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றும்படி மத்திய அரசுக்கு பிரபுல் கோடா பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நாடாளுமன்றத்தின் சட்டத்தின்படி மட்டுமே மாற்ற முடியும். லட்சத்தீவு விவகாரத்தில் கேரள அரசு தலையிடுவதை தடுக்கவே, இந்த புதிய பரிந்துரையை பிரபுல் கோடா செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>