கிராமத்தை சுற்றி காட்டுவதாக கூறி கல்யாணத்திற்கு சென்ற 2 சிறுமிகள் மது குடிக்க வைத்து பலாத்காரம்: மணமகளின் தம்பி உட்பட 4 பேர் கைது

சுர்குஜா:  சட்டீஸ்கரில் கிராமத்தை சுற்றிக் காட்டுவதாக கூறி திருமண விழாவிற்கு சென்ற 2 சிறுமிகளை  மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மணமகளின் தம்பி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டம் பிஷுன்பூர் கிராமத்தில் திருமண கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஜஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16, 17 வயதுடைய  இரு சிறுமிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அப்போது, மணமகளின் சகோதரன் அனில் உட்பட சில இளைஞர்கள் சிறுமிகள் இருவரையும் மைன்பட் கிராமத்தை சுற்றிப் பார்ப்பதற்காக ஆசை வார்த்தை கூறி தங்களது காரில் அழைத்து சென்றனர்.  

மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்ற அவர்கள், சிறுமிகள் இருவரையும் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தனர். ஜாலியாக பேசிக்  கொண்டிருக்கும் போது மணமகளின் தம்பி அனில் மற்றும் அவனது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து இரு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், ‘நடந்து சம்பவத்தை வீட்டில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்துவிட்டு, தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தனர். நடந்த சம்பவத்தை நினைத்து மனமுடைந்த நிலையில் இருந்த சிறுமிகள், திருமண விழா முடிந்ததும் தங்கள் குடும்பத்தினருடன் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

அதன்பின், தங்களது பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகள்களை அழைத்துக் கொண்டு பதல்கான் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட அனில் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து வழக்கின் விபரங்களை சீதாபூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், மணமகளின் சகோதரன் அனில், முகேஷ், ராஜேந்திரா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருவதாக சீதாபூர் இன்ஸ்பெக்டர் ரூபேஷ் நாரங் தெரிவித்தார்.

Related Stories:

>