×

ஊராட்சி துணை தலைவர் பதவி பெற வார்டு உறுப்பினர்களுக்கு லஞ்சம் கைமாறிய வீடியோ வைரல்: மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் துணை தலைவர் பதவி பெறுவதற்காக வார்டு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  அதிமுகவை சேர்ந்த மாலா என்பவர் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்றார். அப்போது வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் துணைத்தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதில் அதிமுக ஆதரவாளரான 12வது வார்டு உறுப்பினர் வினோத்குமார் துணை தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் துணைத்தலைவர் வினோத்குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், துணைத்தலைவர் பதவியை பயன்படுத்தி ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடு  நடத்தியதாகவும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

மேலும் துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து ஊராட்சி தலைவர் மாலாவிடம் நேற்று மனு அளித்ததோடு கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி  அலுவலகம் முன்பு ஆர்ப்பட்டமும் நடத்தினர். இந்நிலையில் ஊராட்சி துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு பெறுவதற்காக வார்டு உறுப்பினர்கள் பலருக்கு வினோத்குமார் தலா ரூ.1.5 லட்சம் லஞ்சம் கொடுக்கும் காட்சி என்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. இதில் வினோத்குமார் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தனித்தனியே வரிசையாக பணம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து துணைத் தலைவர் வினோத்குமார் மறுத்துள்ளார். இந்த வீடியோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊராட்சி துணை தலைவர் பதவி பெற வார்டு உறுப்பினர்களுக்கு லஞ்சம் கைமாறிய வீடியோ வைரல்: மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : vice-president ,Madupalam ,Mattupalayam ,Chickadasampalayam curb ,Mattupalam ,Dinakaran ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து