×

அடுத்த ஆண்டில் 32 ரபேல் ரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்: தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தகவல்

டெல்லி: அடுத்த ஆண்டில் 32 ரபேல் ரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தெரிவித்தார். ஐதராபாத் அருகே தண்டிக்கல் என்ற இடத்தில் விமானப்படை அகாடமியில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பார்வையிட்டார். 36 ரபேல் போர் விமானங்களும் அடுத்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். இதுதான் முழுமையான இலக்கு ஆகும். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். ஒன்றல்லது இரண்டு விமானங்கள் கொரோனா தொற்று பிரச்சினையால் வருவது சற்றே தாமதிக்கலாம். ஆனால் விமானங்களை அவர்கள் சப்ளை செய்வது உரிய நேரத்தில் நடந்து முடியும். 


எனவே ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் நாங்கள் திட்டமிட்டபடி சேர்த்துக்கொள்வோம் என கூறினார். கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லையில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று கேட்கிறீர்கள். இந்தப் பிரச்சினையில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் முதல் முயற்சி என்பது பேச்சு வார்த்தையைத் தொடர்வதும், எஞ்சியுள்ள மோதல் பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வதும்தான். அதன்பின்னர் பதற்றம் தணிந்து விடும் என தெரிவித்தார். இந்திய விமானப்படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன. இந்த பின்னணியில் இந்திய விமானப்படையின் தற்போதைய திறன்மேம்பாடு மிகப்பெரியது என தெரிவித்தார். 



Tags : Commander ,R. Q. S. Badaria , 32 Raphael Type War, Aircraft, Air Force, Commander
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...