×

சென்னை தீவுத்திடலில் உள்ள தமிழ்நாடு ஓட்டல், பயணவழி உணவகம், பொருட்காட்சி மைதானத்தினை ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

சென்னை : சென்னை தீவுத்திடலில் உள்ள தமிழ்நாடு ஓட்டல், பயணவழி உணவகம் மற்றும் பொருட்காட்சி மைதானத்தினை மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்துலீரி, இ.ஆ.ப மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமாகவும் சுவையாகவும் உள்ளதாகவும், இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்குச் எடுத்துச் செல்ல ஏதுவாக ஸ்விக்கி சோமோட்டா போன்றவற்றின் மூலமாக உணவுகளை ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கும், தயாரிக்கப்படும் உணவு வகைகளை தெரிந்து கொள்ள ஒரு அப்பிளிகேசன்  உருவாக்குமாறும் அறிவுறுத்தினார்கள்.

மேலும், தமிழ்நாடு ஓட்டலில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், பொதுமக்கள் உணவு அருந்துவதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறும், ஓட்டலின் உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கு -ஐ விரிவுப்படுத்தவும், பொருட்காட்சி மைதானத்தில் உள்ள உணவகத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நுழைவு வாயிலில் பெரிய அளவில் டுநுனு திரை அமைக்கவும் அறிவுறுத்தினார்கள்.

அதன்பின்னர் பொருட்காட்சி மைதானத்தின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு, பொருட்காட்சி மைதானத்தில் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும், பொருட்காட்சி மைதானத்தில் உள்ள இரண்டு மைதானத்திற்கும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டு பயன்பெறும் வகையில் கூவம் நதிக்கரையின் நடுவில் ஒரு நிரந்தர பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.


Tags : Minister of Tourism ,Tamil Nadu Hotel ,Chennai Island , தமிழ்நாடு ஓட்டல், பயணவழி உணவகம்
× RELATED தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம்...