×

சிவகங்கை-யில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!: அதிகாரிகள் நடவடிக்கை..!!

சிவகங்கை: சிவகங்கையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. சிவகங்கையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ கௌரி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான10 ஏக்கர் புஞ்சை நில சொத்துக்களை குறிப்பிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது. ஸ்ரீ கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் மேலூர் செல்லும் சாலையில் உள்ளது. 


இதன் மதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டி வருவதாகவும், கட்டுப்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் சிவகங்கையில் அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 


அப்போது ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்படும் கட்டட பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதிக்கு முழுவதுமாக சீல் வைத்தனர். விசாரணையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகன் பாலா, உறவினர் சரவணன் உள்ளிட்டோர் மோசடியாக பத்திரம் தயாரித்து  அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம், வணிக வளாகம் போன்றவை கட்டி வந்தது தெரியவந்தது. 


தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் அபகரித்து இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து கோயில் நிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  



Tags : Moratorium ,Sivangai , Sivagangai, Trust Department, Occupied Land, Redemption
× RELATED சென்னை வழிப்பறி ஆசாமி சிவங்கையில் அதிரடி கைது