அயர்லாந்து ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் ஓய்வு

டப்ளின்: அயர்லாந்து அணி ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் (37 வயது), சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2006ல் அறிமுகமான கெவின், இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3619 ரன் (அதிகம் 142, சராசரி 29.42, சதம் 2, அரை சதம் 18) மற்றும் 114 விக்கெட் (சிறப்பு 4/13) எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், சர்வதேச டி20ல் தொடர்ந்து விளையாடப் போவதாக கெவின் தெரிவித்துள்ளார்.

Related Stories: