இமயமலை பழங்குடி கிராமத்தில் விநோதம்; ஒரே பெண்ணை மணந்த 5 சகோதரர்கள்: பல குடும்பங்கள் இப்படிதான் வாழ்கிறது

ராஜு வர்மா: இமயமலையின் தொலைதூர கிராமமான ராஜு வர்மா பகுதியில் ராஜோ என்ற பழங்குடியின பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஐந்து கணவர்களும் உள்ளனர். இவரது கணவர்கள் அனைவரும் சகோதரர்கள். ஒவ்வொரு இரவும் யாருடன் தூங்க வேண்டும் என்பது, ராஜோவின் விருப்பமாகும். ஐந்து கணவர்களான சந்த் ராம், பஜ்ஜு, கோபால், குடு, தினேஷ் ஆகியோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களிடையே எந்த குழப்பமோ, சண்டையோ இல்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். அதேபோல், சுனிதா தேவி என்பவருக்கு ரஞ்சித் சிங், சந்திர பிரகாஷ் என்று இரண்டு கணவர்கள் உள்ளனர்.

இதுகுறித்து சுனிதா தேவி கூறுகையில், ‘நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இரண்டு கணவர்களில் ஒருவர் எனக்கு சமைக்க உதவுகிறார். மற்றொருவர் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்து வருகிறார்’என்றார். மேலும் புத்த தேவி என்ற பெண் இரண்டு சகோதரர்களை மணந்துள்ளார். இந்த பெண்ணுக்கு இப்போது சுமார் 70 வயது இருக்கும். அவரது கணவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஒருவருடன் மட்டும் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து புத்த தேவி கூறுகையில், ‘எங்களின் பாரம்பரிய முறைப்படி பல நூற்றாண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உள்ளது.

பெரும்பாலும் சகோரர்களாக உள்ள ஆண்களையே ஒரு பெண் திருமணம் செய்து கொள்வார். அவர்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகள் தனித்தனியாக பிரித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்பதால், அதனை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுவிட முடியும். இதேபோன்று பல குடும்பங்கள் எங்கள் கிராமத்தில் உள்ளன. அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்’ என்றார்.

Related Stories:

More
>