×

பாஜ இளைஞரணி நிர்வாகியின் வீடு முன் அடாது மழையில் விடாது தர்ணா செய்த மனைவி

சிலிகுரி: சிலிகுரியில் பாஜக இளைஞரணி நிர்வாகியின் மனைவி, குடும்ப பிரச்னையால் தனது கணவர் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் வசிக்கும் டார்ஜிலிங் மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் சஞ்சீவ் கோஷ்  என்பவருக்கும், ஸ்வேதா கோஷ் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், அவர்கள் இருவருக்குள்ளும் குடும்ப பிரச்னை இருந்தது. அதனால் மனைவி ஸ்வேதா கோஷை, சஞ்சீவ் கோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றினர். சில நாட்கள் அவரது பெற்றோர் வீட்டில் இருந்த ஸ்வேதா கோஷ், நேற்று தனது கணவர் வீட்டின் முன் பலத்த மழைக்கும் மத்தியில் அமர்ந்து தர்ணா செய்தார்.

அப்போது, ஸ்வேதா கோஷ் கூறுகையில், ‘திருமணத்திற்குப் பிறகு எனது கணவர் என்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வந்தார். அவர் என்னை வீட்டை விட்டு துரத்தினார். அவர் அவரது குடும்பத்தினரை மட்டுமே விரும்புகிறார். நான் என்னுடைய கணவரின் வீட்டில்தான் வாழ்வேன். இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன்’ என்றார். தகவலறிந்த போலீசார்,  தர்ணாவில் ஈடுபட்ட ஸ்வேதா கோஷிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டதிட்ட 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இதனால், சிலிகுரியில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து சஞ்சீவ் கோஷ் கூறுகையில், ‘நான் மனதளவில் சித்திரவதையை எதிர்கொள்கிறேன். என் மீது பல வழக்குகள் உள்ளன. விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளேன். அவரை எனது வீட்டிற்குள் நுழைய விடமாட்டேன்’ என்றார்.


Tags : Dharna ,baja , Baja Youth Administrator, Dharna, wife
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...