3 நாளில் ரூ.66,681 கோடி நஷ்டம்: ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி

மும்பை : இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 3 நாட்டில் மட்டும் ரூ. 66, 000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கெளதம் அதானி குழுமத்தில் சுரங்கங்கள், மின் நிலையங்கள், விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி நிறுவனங்கள், எரிவாயு நிலையங்கள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மீதான பங்குகளில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய 3 வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் எனப்படும் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து உடனடியாக பங்குகளில் வீழ்ச்சி தொடங்கியது.இவரது 6 நிறுவனத்தின் பங்குகள் 5% முதல் 25% வரை சரிந்தன. அதானிக்கு கடந்த 3 நாட்களில் ரூ. 66,681 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு தொழில் அதிபரும் ஒரே வாரத்தில் இவ்வளவு தொகையை இழக்கவில்லை. இதனால் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் உள்ள அதானிக்கு சிக்கல் ஏற்பட்டது.ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்னும் நிலையையும் அதானி இழந்திருக்கிறார். சர்வதேச அளவில் 15-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறார். அதானியின் 2-ம் இடத்தை பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார். 4 நாட்களில் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் 7.7%மும் அதானி துறைமுகங்கள், சிறப்பு பொருளாதார மண்டல பங்குகள் 23% ஆகவும் குறைந்துள்ளது. 

Related Stories:

>