×

முன் ஜாமீன் கோரி பப்ஜி மதன் மனு தாக்கல் யூடியூபில் மதன் பேச்சை கேட்டுவிட்டு வாதிடுங்கள்: காது கொடுத்து கேட்கமுடியாத அளவிற்கு பேச்சு இருக்கிறது; மனுதாரர் தரப்பு வக்கீலுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் அவரின் யூடியூபுக்கு பக்கத்துக்கு பார்வையாளர்களை அதிகமாகி 7.8 லட்சம் அவரது யூடியூப்பை பின் தொடர்ந்தனர். சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். அதன்பின்னர் பப்ஜி மதன் தலைமறைவானார். இதனையடுத்து அவர் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்போது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் மதன்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று வாதிட்டார்.போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் முனியப்பராஜ், மதனின் யுடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள். ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளார். அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டு மதனின் ஆடியோக்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

அந்த ஆடியோவை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். இதையடுத்து, யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என்று மனுதாரர் வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், நீதிபதி, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டேன். மனுதாரரின் அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார். மேலும், மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடியாகவோ, பென் டிரைவாகவோ தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தி உள்ளார்.

Tags : Babji Madan ,Madan ,YouTube ,ICC , Babji Madan files pre-bail petition Madan listens to Madan's speech on YouTube ICC advice to petitioner's counsel
× RELATED பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை...