விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ் விலகினார் ரபேல் நடால்

மாட்ரிட்: விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால் அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபனில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரான நடால், இந்த ஆண்டு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சிடம் தோற்று வெளியேறினார். கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் தலா 20 பட்டங்களுடன் நடால், பெடரர் சமநிலை வகிக்க, ஜோகோவிச் (19) அடுத்த இடத்தில் உள்ளார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் தொடங்கும் விம்பிள்டன் மற்றும் அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக நடால் நேற்று அறிவித்தார். தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் உடல் சோர்வடைந்துள்ள நிலையில் ஓய்வு தேவைப்படுவதாகவும், இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாட இது மிகவும் அவசியம் என கருதுவதால் விம்பிள்டன், ஒலிம்பிக்சில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: