தமிழகத்துக்கு 4.36 லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் வந்தது

சென்னை: ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை விமானத்தில் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும், புனேவில் இருந்து மாலை 3 லட்சத்து 76 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் சென்னை வந்து சேர்ந்தது. தமிழகத்துக்கு தேவைப்படும் கூடுதல் தடுப்பூசிகள், மருந்து நிறுவனங்களுடன் தமிழக அரசே நேரடியாக தொடர்புகொண்டு கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்துக்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று காலை 8.40 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து புளூடார்ட் கொரியர் விமானத்தில் விமான நிலையத்துக்கு 13 பார்சல்களில் வந்து இறங்கின. இதை தொடர்ந்து, நேற்று மாலை 5.40 மணிக்கு புனேவிலிருந்து  வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 3,76,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 32 பார்சல்களில் விமானநிலையம் வந்தன. அதில் 2,76,000 டோஸ் தடுப்பூசிகள் தமிழக அரசிற்காக வந்தது. மேலும் ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

>