×

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பரிதாப பலி!: எஞ்சியவர்கள் கதி?

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பருவமழை காரணமாக இந்திராவதி மற்றும் மேலம்ஷீ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுத் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர். 


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில்  சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பூடான் நாட்டில் மருத்துவ குணமுள்ள இலைகளை பறிக்க வனப்பகுதிக்குள் சென்றவர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். 


தலைநகர் தும்புவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் முகாம் ஒன்றில் இரவு தூங்கி கொண்டிருந்த போது உள்ளே புகுந்த வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. இதில் சிலரது உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டரில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 



Tags : Nepal , Nepal, floods, 10 killed
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது