×

ஜெனீவாவில் 4 மணி நேரம் பைடன்-புடின் பேச்சுவார்த்தை

ஜெனீவா: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பைடன் தனது முதல் வெளிநாடு பயணத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினார். ஜி-7 மாநாடு, நேட்டோ மாநாடு என அடுத்தடுத்து பங்கேற்றார். அப்போது, சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக உலக தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய ்அதிபர் விளாடிமிர் புடினை ஜெனீவாவில் நேற்று முதல் முறையாக சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டு நல்லுறுவு, அமெரிக்க அரசு அலுவலகங்கள் மீதான ரஷ்யாவின் சைபர் தாக்குதல், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் உக்ரேனில் ரஷ்யாவின் ஊடுருவல் உள்ளிட்டவை குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில், முக்கியத்துவம்  வாய்ந்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த சந்திப்பு 4 மணிநேரம் நடந்தது.

Tags : Putin ,Geneva , 4 hour Python-Putin talks in Geneva
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...