அணைகள் இயக்ககம், பராமரிப்பு தலைமை பொறியாளர் நியமனம்

சென்னை: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள் இயக்ககம், பராமரிப்பு தலைமை பொறியாளர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நீர்வள ஆதாரத்துறை அங்கமான அணைகள் இயக்ககம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கடந்த மே 28ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் உள்ளார். எனவே, அவருக்கு பதிலாக பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் ராஜா மோகன் அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>