×

கட்சியில் இருந்து 9 பேர் நீக்கம் சமாஜ்வாடியில் பகுஜன் எம்எல்ஏ.க்கள் சேர்ப்பா?: மாயை என்கிறார் மாயாவதி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இப்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்ட ஹகிம் லால் பிந்த், வந்தனா சிங் உள்ளிட்ட 9 எம்எல்ஏ.க்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினர். இதனால், அவர்கள் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘குறுக்கு வழி அரசியல் செய்வதில் கில்லாடியான சமாஜ்வாடி, வெறுக்கத்தக்க வகையில் ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துகிறது. ஊடகங்கள் மூலம் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடியில் இணைய இருப்பதாக கூறி கட்சியை உடைக்க நினைக்கிறது. இதுவொரு மாயை. சமாஜ்வாடி எப்போதும் தலித்துக்கு எதிராகவே செயல்படும்,’ என கூறியுள்ளார்.

Tags : Bahujan ,Samajwadi Party ,Mayawati , 9 BJP MLAs to be expelled from Samajwadi Party: Mayawati
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு