பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கராத்தே மாஸ்டர் ஜாமீன் மனு தள்ளுபடி: செசன்ஸ் கோர்ட் உத்தரவு

சென்னை:  பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தில் இயங்கி வரும் பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடைபெறுவதாக மாணவிகள் சமூக வலைதளத்தில் புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11-12ம் வகுப்பு மாணவிகளுக்கு  பாடம் எடுக்கும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பல மாணவிகளை சீரழித்த விவகாரம் தெரிய வந்தது. இதனைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இந்த பெரும் சர்சைக்குரிய விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், விருகம்பாக்கம் பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த  கராத் தே ஆசிரியர். கெபிராஜ் மீது மாணவி ஒரு பாலியல் புகார் அளித்தார். அதில், அவர் தன்னை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கூறியிருத்தார்.

இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பெண்கள் போலீசாரிடம் ரகசியமாக புகார் அளித்தனர். மேலும் கெபிராஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து, சீரழித்தாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தனி அதிகாரி நியமித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில், ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடும்போது, வழக்கு தவறாக, உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்டு 2 வாரம் காவலில் உள்ளார், போலீஸ் காவலில் விசாரணையும் முடிந்தது, எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

போலீசார் தரப்பில் வாதிடுகையில் மனுதாரர் புகார் அளித்துள்ள மாணவியிடம் மட்டுமல்லாமல் தன்னிடம் பயிற்சி பெற்ற வேறு சில மாணவிகளிடமும் தவறான முறையில் நடந்துள்ளார். மேலும் பல சிறுமிகளும் உள்ளனர்,  தனக்கு 13 வயதாக இருக்கும் போது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிய வாய்ய்பு உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>