புதுச்சேரி சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக செல்வம் பதவியேற்றார்

புதுச்சேரி:  புதுச்சேரி சட்டமன்றம் நேற்று கூடியது.  தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் திருக்குறளை வாசித்து அவையை துவக்கி  வைத்தார்.  பின்னர், பாஜவை சேர்ந்த செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதைத்  தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் அவரை வாழ்த்திப்  பேசினார். பின்னர் ஏம்பலம்  செல்வத்தை சபாநாயகர் இருக்கைக்கு முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா  ஆகியோர் அழைத்து சென்று அமர வைத்தனர். சபாநாயகர் பொறுப்பேற்றுள்ள ஏம்பலம் செல்வத்தை வாழ்த்தி  எம்எல்ஏக்கள் பேசினர்.

Related Stories:

>