கரண்டி, நாணயம், தட்டு மட்டுமல்ல... டிவி ரிமோட், செல்போனும் ஒட்டுது!: குஜராத் மக்கள் குழப்பம்

அகமதாபாத்: கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு உடலில் காந்த சக்தி ஏற்படுவதாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது குஜராத்தின் பனஸ்காந்தாவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இரண்டு தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்ட பாட்டிக்கும், பேரனுக்கும் உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘பலன்பூர் அடுத்த நவ்ஜீவன் பகுதியில் வசிக்கும் நவீன்பாய் என்பவர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சர்ட்டில் இருந்த நாணயங்கள் அவரது உடலில் ஒட்ட ஆரம்பித்தன.

அதிர்ச்சியடைந்த அவர், உடலில் ஒட்டிய நாணயங்களை அகற்ற முயற்சித்தபோது, அவை காந்த சக்தியால் பிடித்துக் கொண்டது தெரியவந்தது. பின்னர், அந்த நாணயத்தை வலுக்கட்டாயமாக எடுத்துவிட்டார். அவரை, மருத்துவ பரிசோதனைக்கு, அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். அதேபோல், அவரது பாட்டிக்கும் ஏற்பட்டது. மேலும், சூரத்தின் சுபாஷ்நகரில் பூனம் ஜக்தாப் என்பவரின் மாமியார், மகனின் உடலில் காந்த சக்தி இருப்பதால், அவர்களின் உடலில் கரண்டி, தட்டு, செல்போன், டிவி ரிமோட் உள்ளிட்ட பொருட்களும் ஒட்டிக் கொள்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை’ என்றனர்.

Related Stories:

>