நியூசிலாந்தை வீழ்த்த முழுமையான கவனம் தேவை: சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை

மும்பை: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி நாளை மறுநாள்  இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் தொடங்குகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர்  அளித்த பேட்டி: நியூசிலாந்து இங்கிலாந்தின்  சீதோஷண நிலைமைகளை விரைவாக சரி செய்யும். ஆனால் கடைசியாக இரு அணியினரும் மோதிய  தொடரில், இந்தியாவை சொந்த மண்ணில்  நியூசிலாந்து வீழ்த்திய போதிலும், சவுத்தாம்ப்டனில் இந்தியாவை அவர்கள் வீழ்த்த நல்ல தரமான கிரிக்கெட் விளையாட வேண்டியிருக்கும்.

இதனை எதிர்கொள்ள இந்தியா முழுமையாக தயாராக இருக்க வேண்டும். பாதி வாய்ப்புகள் ஏதேனும் இருந்தால் அதை மாற்ற வேண்டும். இந்த போட்டியை காண நான் ஆர்வமாக இருக்கிறேன். இது ஒரு அருமையான டெஸ்ட் போட்டியாக இருக்கும். இரு அணிகளும் இங்கு வருவதற்கு (பைனல்) கடுமையாக உழைத்துள்ளன. இரண்டு சிறந்த அணிகள் மோதும் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், என்றார்.

Related Stories: