×

தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளை நடப்பாண்டே முடிக்க பொதுப்பணித்துறை திட்டம்..!!

சென்னை: தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை கிண்டியில் புதிய திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. 


அப்போது மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிங்ஸ் மருத்துவமனையில் அமையவுள்ள பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மறைந்த எழுத்தாளர் சி.ராஜநாராயணனுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கான மதிப்பீடு ஆகியவற்றிற்கான வரைபடங்களை விரைந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 


அதுமட்டுமின்றி அரசு துறைசார்ந்த கட்டிடங்களை கட்ட ஒப்பந்தம் போடும் நாளிலேயே பணிகளை முடிக்கும் தேதியையும் குறிப்பிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல் தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். 


புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் கட்டடம் மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கான அமைக்கப்படும் கட்டுமானங்களின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார். 


முன்னதாக கொரோனா 2அலை காலத்தில் மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படியில் ஆக்சிஜன் வசதி கூடிய 11 ஆயிரத்து 993 படுகைகளை ஏற்படுத்தி கொடுத்த பொறியாளர்களை அமைச்சர் பாராட்டினார்.



Tags : Tamil Nadu , Tamil Nadu, Medical College, Public Works Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...