×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 'சில்மிஷ'சிவசங்கர் பாபா டெல்லியில் கைது :விரைவில் சென்னை அழைத்து வரப்படுகிறார்!!

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா டெல்லி காசியபாத்தில் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு  கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் நடன சாமியார் சிவசங்கர் பாபா (72) என்பவர், 20 ஆண்டுகளாக ‘சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் கூறினர். அதை விசாரித்தபோது புகார் உண்மை என்று போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்பட பல்வேறு 3 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர் வட இந்தியாவிற்கு தப்பிச் சென்றுவிட்டார். பாலியல் விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து இந்த வழக்கை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வடமாநில விஐபிக்களின் உதவியுடன் நேபாளம்  உள்ளிட்ட வெளிநாடு செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் தேடப்பபடும் குற்றவாளியாக அறிவித்து ‘லுக் அவுட்’  நோட்டீஸ் அனுப்பிவைத்தனர். இதை அறிந்த விசாரணை அதிகாரிகளான டிஎஸ்பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்று  அங்குள்ள போலீசார் உதவியுடன் முகாமிட்டுள்ளனர். அவர் மருத்துவமனையில் இந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையே, சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கையை அறிந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையில்  இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.இருப்பினும், சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா, உத்தரப் பிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காசியபாத்தில் சிவசங்கர் பாபாவை டெல்லி போலீஸ் கைது செய்து தமிழக சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்தது. டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள இவர் இன்று இரவு அல்லது நாளை சென்னை அழைத்து வரப்படுகிறார்.

Tags : Silmisha'Sivishankar ,Baba Deli ,Chennai , சிவசங்கர் பாபா
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு